"வெளிநாடுகளில் இருந்து கப்பலில் வரும் பொருட்களை வாங்கி அதிக லாபத்துக்கு விற்கலாம்" என பலரிடம் ஆசைகாட்டி மோசடி செய்த நபர் கைது
வெளிநாடுகளில் இருந்து கப்பலில் வரும் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபத்துக்கு விற்கலாம் எனக் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றிய நபர் சென்னை தாம்பரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாப்பூரைச் சேர்ந்த ஷாநவாஸ்கான் என்ற அந்த நபர் ஆறாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், சரளமாக ஆங்கிலம் பேசும் தனது திறமையைக் கொண்டு, நண்பர்கள், நண்பரின் நண்பர்கள் என பலரிடமும் 10 லட்ச ரூபாய் முதல் 65 லட்ச ரூபாய் வரை பெற்று மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தாம்பரத்தைச் சேர்ந்த காசிம் என்பவரிடம் முதலில் 10 லட்ச ரூபாய் வாங்கி, 13 லட்ச ரூபாயாக திருப்பிக் கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தி, பிறகு 66 லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு கம்பி நீட்டியதாக சொல்லப்படுகிறது. காசிம் கொடுத்த புகாரின் பேரில் ஷாநவாஸ்கானை போலீசார் கைது செய்தபோதுதான், அவரைப் போலவே ஏராளமானோர் பணம் கொடுத்து ஏமாந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments